உயிர் பெற்ற என்
மன உணர்வுகள்
இன்று உனக்காக இயங்க
ஆரம்பித்துவிட்டன..
கண்கள் இரண்டும்
உன்னைப்பற்றிய கனவுகளோடு
காத்திருக்கின்றன..
தனிமை எதையோ சொல்ல
தவிப்புகளும் தொடர்கின்றன..
தயக்கம் ஏதுமின்றி
உன்னை தாங்கிட
உள்ளம் துடிக்கிறது..
இறுதி மூச்சு உள்ளவரை
உனக்காய் வாழ்ந்திட
எனக்கொரு அனுமதி
அளிதிடுவாயே!


